- முன்னேறத் துடிக்கும் உங்களுக்கு நம் முன்னோர்கள் சொன்ன முன்னேற்ற மொழிகள்…
- நம்புபவர்களே வெல்கிறார்கள்! _ மக்சிம் கார்க்கி
- நம்மால் செய்ய முடியும் என்று நாம் நினைப்பதைக் காட்டிலும் நாம் அதிகமாகவே செய்ய முடியும். ஆனால் செய்ய முடிந்ததைக் காட்டிலும் குறைவாகவே செய்கிறோம். _ ஹென்றிபோர்டு
- உற்சாகம் உள்ளவர்களுக்குத்தான் இந்த உலகம் சொந்தம் _ எமர்சன்.
- லாபத்திலேயே குறிக்கோளாய் இருந்தால் பிறரது வெறுப்பைத்தான் சாம்பாதிக்க வேண்டி இருக்கும். _ கன்பூசியஸ்
- நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய். நீ விரும்பாததை உலகமே வற்புறுத்தினாலும் செய்யாதே! - சாணக்கியன்
- அடைய விரும்புகின்ற குறிக்கோளைவிட மீறுவதும், குறைவதும் தவறு! _ கன்பூசியஸ்.
- உங்களது திறமைகளை பிறர் உணரவில்லை என்று கவலைப்பட வேண்டாம். பிறர் உங்களது தகுதியை உணர்ந்து கொள்ளுமாறு நீங்கள் நடந்து கொள்ளுங்கள். _ கன்பூசியஸ்.
- தோல்வியே முன்னேற்றத்தின் முதற்படி. _ பழமொழி
- சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்று எந்த மாபெரும் மனிதனும் குறை கூற மாட்டான். _ எமர்சன்
- .....................................
- தமிழ் சினிமாக்களிலும் சில நல்ல விஷயங்கள் சொல்லி இருக்காங்க. தெரிஞ்சுக்கலாமா…
- வலிதான் வெற்றியின் ரகசியமே. _ பாய்ஸ்
- கஸ்டப்பட்டு செய்வதைவிட இஸ்டப்பட்டு செய்பவனே ஜெயிக்கிறான்.
- _ கஜினி
- அற்புதமான நண்பர்கள் கிடைத்தால் வெற்றிகள் குவியுமடா! _சென்னை.28
- தலைக்கனம் தரும் வெற்றியைவிட ஜெயிக்கணும்ங்கிற வெறியைத் தரும் தோல்வியை கொண்டாடலாம். _ தில்லாலங்கடி
-
- · என்ன பாஸ் பண்றது சினிமாவுல இருந்து நாலு விஷயத்தை சொன்னாத்தான் இளசுங்க கேக்குறாங்க…
- · உழைப்பு உன்னை உயர்த்தும்.
- · முயல்பவனே முன்னேறுகிறான்.
- _ இந்த ரெண்டும் நானே சொன்னதுங்க.
- இப்போ உங்களுக்கு உற்சாகம் கிடைச்சுதுதானே பாஸ்!
முன்னேற்ற மொழிகள்!
நீ விரும்பியதைக் கொடு!
கதையோடு பின்னியது நமது வாழ்க்கை. என் வாழ்க்கையே பெருங்கதை என்கிறீர்களா?. நிலாக்கதை கேட்டு சோறு சாப்பிட்டு வளராத குழந்தை தமிழ்நாட்டில் கிடையாது. இதுவரை கேட்காத கதையா கேட்டுவிடப்போகிறோம் என்று எண்ணலாம். கதையைப் படிக்க நெட்டிற்கு எல்லாம் வர வேண்டுமா
மேலும் படிக்க !
