முன்னேறத் துடிக்கும் உங்களுக்கு நம் முன்னோர்கள் சொன்ன முன்னேற்ற மொழிகள்…
நம்புபவர்களே வெல்கிறார்கள்!_ மக்சிம் கார்க்கி
நம்மால் செய்ய முடியும் என்று நாம் நினைப்பதைக் காட்டிலும் நாம் அதிகமாகவே செய்ய முடியும். ஆனால் செய்ய முடிந்ததைக் காட்டிலும் குறைவாகவே செய்கிறோம்._ ஹென்றிபோர்டு
உற்சாகம் உள்ளவர்களுக்குத்தான் இந்த உலகம் சொந்தம் _ எமர்சன்.
லாபத்திலேயே குறிக்கோளாய் இருந்தால் பிறரது வெறுப்பைத்தான் சாம்பாதிக்க வேண்டி இருக்கும்._ கன்பூசியஸ்
நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய். நீ விரும்பாததை உலகமே வற்புறுத்தினாலும் செய்யாதே!- சாணக்கியன்
அடைய விரும்புகின்ற குறிக்கோளைவிட மீறுவதும், குறைவதும் தவறு!_ கன்பூசியஸ்.
உங்களது திறமைகளை பிறர் உணரவில்லை என்று கவலைப்பட வேண்டாம். பிறர் உங்களது தகுதியை உணர்ந்து கொள்ளுமாறு நீங்கள் நடந்து கொள்ளுங்கள். _ கன்பூசியஸ்.
தோல்வியே முன்னேற்றத்தின் முதற்படி._ பழமொழி
சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்று எந்த மாபெரும் மனிதனும் குறை கூற மாட்டான். _ எமர்சன்
.....................................
தமிழ் சினிமாக்களிலும் சில நல்ல விஷயங்கள் சொல்லி இருக்காங்க. தெரிஞ்சுக்கலாமா…
நான் உங்களில் ஒருவன். உங்கள் காலத்தில் உங்களோடு சேர்ந்து வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொண்டிருக்கும் ஒருவன். என் பெயர் அருணா ஜெயபால், பாலா என்று நண்பர்கள் அழைப்பார்கள், மற்றபடி சாதாரணமானவன்தான்.
நாம் மனிதர்கள் என்றாலும் ஒவ்வொருவருக்கும் சிந்தனையும், அனுபவங்களும் வேறுபடுவதில்லையா? என் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நீங்களும் பாலபாடம் கற்றுக் கொள்ளலாம். கருத்துக்கள் மூலமாக எனக்கும் கற்றுத் தரலாம்.
0 comments:
Post a Comment